முகப்புக்குத் திரும்ப
தெரிந்துகொள்ளுங்கள்

பணத் திரும்பப்பெறல் & திரும்ப அனுப்பும் கொள்கை

இது புரிந்துகொள்வதற்கான தமிழ் மொழிபெயர்ப்பு. சட்டப்படி பொருந்துவது ஆங்கிலப் பதிப்பே. இரண்டுக்கும் இடையே வேறுபாடு இருந்தால் ஆங்கிலப் பதிப்பே செல்லும்.

உங்கள் அளவுக்கே தயாரிக்கப்படுகிறது

  • நீங்கள் ஆர்டர் செய்த பிறகு, நீங்கள் தரும் அளவுகளுக்கே ஒவ்வொரு பார்மாவும் வரையப்பட்டு வெட்டப்படுகிறது. அது ஒருவருக்காக மட்டுமே தயாரிக்கப்படுவதால் வேறு யாருக்கும் விற்க முடியாது. எனவே பார்மாக்களைத் திரும்பப் பெற முடியாது, பணமும் திரும்பத் தர முடியாது.
  • ஆர்டரை உறுதிப்படுத்தும் முன் உங்கள் அளவுகளைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். வெட்டுவதற்கு முன் அவற்றை உங்களிடம் தொலைபேசியில் படித்துக் காட்டுகிறோம் — திருத்திக்கொள்ள அதுவே உங்களுக்கான வாய்ப்பு.

தையல் துணைப் பொருட்கள்

  • ஸ்கேல், கத்திரிக்கோல் மற்றும் பிற தையல் துணைப் பொருட்கள் டெலிவரி ஆன பிறகு திரும்பப் பெறவோ பணம் திரும்பத் தரவோ முடியாது. ஆர்டர் செய்யும் முன் பொருள் பக்கத்தில் உள்ள விவரங்களையும் அளவையும் பார்த்துக்கொள்ளுங்கள்.
  • கீழே உள்ள பகுதிக்கு இது பொருந்தாது: சேதமடைந்து வந்தாலோ, தவறான பொருள் வந்தாலோ, வந்தே சேராவிட்டாலோ, அது எதுவாக இருந்தாலும் சரிசெய்யப்படும்.

சேதம், தவறான பொருள், அல்லது வந்து சேராதது

  • நீங்கள் ஆர்டர் செய்த எதுவும் சேதமடைந்து வந்தாலோ, நீங்கள் ஆர்டர் செய்த பொருள் இல்லாவிட்டாலோ, அல்லது வந்தே சேராவிட்டாலோ, அதை மாற்றித் தருகிறோம் அல்லது முழுப் பணத்தையும் திரும்பத் தருகிறோம். டெலிவரி ஆன தேதியிலிருந்து, அல்லது வர வேண்டிய தேதியிலிருந்து, 7 நாட்களுக்குள் எங்களிடம் தெரிவியுங்கள்.
  • இது துணைப் பொருட்களுக்கு எப்படியோ, பார்மாக்களுக்கும் அப்படியே பொருந்தும். இது திரும்ப அனுப்புதல் அல்ல: சொன்னபடி ஆர்டர் வந்து சேராதபோது உங்களுக்கு நாங்கள் தர வேண்டிய கடமை. மேலே உள்ள எதுவும் இதை நீக்காது.
  • நாங்கள் ஒப்புக்கொண்ட 5 முதல் 7 வேலை நாட்களுக்குள், நீங்கள் பணம் செலுத்திய அதே வழியில் பணம் திரும்பச் செலுத்தப்படும். பொருள் வந்ததும் பணம் செலுத்திய ஆர்டராக இருந்தால், பணம் அனுப்ப வங்கி விவரங்களைக் கேட்போம்.

ஆர்டரை ரத்து செய்தல்

  • பார்மாவை வெட்டத் தொடங்கும் வரை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்து முழுப் பணத்தையும் திரும்பப் பெறலாம். வெட்டத் தொடங்கிய பிறகு ரத்து செய்ய முடியாது, ஏனெனில் அது உங்களுக்காக மட்டுமே தயாரிக்கப்படுகிறது.

தகராறுகள்

  • ஆர்டர் தொடர்பான எந்தத் தகராறையும் டெலிவரி ஆன 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.

உள்ளடக்கச் சட்டப்பூர்வத்தன்மை

  • வாங்கிய பார்மாக்களைத் தவறாகப் பயன்படுத்துவது (மறுவிற்பனை அல்லது அனுமதியற்ற விநியோகம் போன்றவை) சட்ட நடவடிக்கைக்கு வழிவகுக்கும், அத்தகைய சூழலில் பணம் திரும்பப் பெற உரிமை இருக்காது.

உதவியும் கேள்விகளும்

  • ஏதேனும் கேள்வி அல்லது உதவி தேவைப்பட்டால், எங்கள் வாடிக்கையாளர் சேவைக் குழுவைத் தயங்காமல் தொடர்புகொள்ளுங்கள்.

இது குறித்து கேள்விகள் உள்ளதா? அழையுங்கள் +91 84486 38639 காலை 9.30 – மாலை 6.30; அல்லது மின்னஞ்சல்: orders@fashiondot.in.

Size Hub-ல் குக்கீகள்

உங்கள் கூடையையும் மொழியையும் நினைவில் வைக்க குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். கடை எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதை அளக்கும் குக்கீகள், நீங்கள் சம்மதித்தால் மட்டுமே வைக்கப்படும். ஒரு விளம்பரக் குக்கீ மட்டும் எப்படியும் வைக்கப்படும் — அது எது, ஏன் என்பதைக் கீழே உள்ள அறிவிப்பு விளக்குகிறது. குக்கீகளை நாங்கள் எப்படிப் பயன்படுத்துகிறோம்