முகப்புக்குத் திரும்ப
தெரிந்துகொள்ள வேண்டியவை

விதிமுறைகள் & நிபந்தனைகள்

இது புரிந்துகொள்வதற்கான தமிழ் மொழிபெயர்ப்பு. சட்டப்படி பொருந்துவது ஆங்கிலப் பதிப்பே. இரண்டுக்கும் இடையே வேறுபாடு இருந்தால் ஆங்கிலப் பதிப்பே செல்லும்.

விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளுதல்

  • Size Hub என்ற பெயரில் வணிகம் செய்யும் Fashion Dot Young Laser India Pvt Ltd நிறுவனத்திடம் ஆர்டர் செய்யும்போது, இந்த விதிமுறைகளுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.

நாங்கள் விற்பது என்ன, அதை எப்படிப் பயன்படுத்தலாம்

  • பார்மாக்கள் என்பவை உண்மையான பேப்பர் பார்மாக்கள். ஒவ்வொன்றும் நீங்கள் தரும் அளவுகளுக்கே வரையப்பட்டு, பேப்பரில் வெட்டப்பட்டு, கூரியரில் உங்களுக்கு அனுப்பப்படுகிறது. எதுவும் டவுன்லோட் செய்யப்படுவதில்லை.
  • பிளவுஸ், சுடிதார், ஜென்ட்ஸ் ஷர்ட், ஜென்ட்ஸ் பேண்ட் ஆகியவற்றுக்கான பேப்பர் பார்மாக்களையும், ஸ்கேல் மற்றும் கத்திரிக்கோல் போன்ற தையல் துணைப் பொருட்களையும் விற்கிறோம். துணைப் பொருட்கள் ஸ்டாக் பொருட்கள், அவை அளவுக்கேற்பத் தயாரிக்கப்படுவதில்லை.
  • உங்கள் சொந்தத் தையலுக்கோ, உங்கள் தையல் கடையில் பயன்படுத்தவோ இவை விற்கப்படுகின்றன.
  • வாங்குவதற்கு முன் பொருள் விவரங்களையும் மாதிரிப் படங்களையும் பார்க்கலாம்.

அறிவுசார் சொத்து

  • எங்கள் பார்மாக்களும் அவற்றுக்குப் பின்னால் உள்ள வரைபடங்களும் Fashion Dot Young Laser நிறுவனத்தின் அறிவுசார் சொத்து. அவற்றை நகலெடுக்கவோ, மறுஉருவாக்கம் செய்யவோ, மறுவிநியோகம் செய்யவோ கூடாது.
  • அனுமதியற்ற பயன்பாடு தடைசெய்யப்பட்டது, சட்ட நடவடிக்கைக்கு உட்பட்டது.

திரும்ப அனுப்புதலும் பணத் திரும்பப்பெறலும்

  • ஒவ்வொரு பார்மாவும் நீங்கள் ஆர்டர் செய்த பிறகு உங்கள் சொந்த அளவுகளுக்கே வெட்டப்படுகிறது. அது ஒருவருக்காக மட்டுமே தயாரிக்கப்படுவதால் வேறு யாருக்கும் விற்க முடியாது. எனவே பார்மாக்களைத் திரும்பப் பெற முடியாது, பணமும் திரும்பத் தர முடியாது.
  • தையல் துணைப் பொருட்களும் அப்படியே — டெலிவரி ஆன பிறகு திரும்பப் பெறவோ பணம் திரும்பத் தரவோ முடியாது.
  • வெட்டுவதற்கு முன் உங்கள் அளவுகளை உங்களிடம் படித்துக் காட்டுகிறோம். தவறு இருந்தால் அந்த அழைப்பில்தான் தெரியவரும், அதனால் ஆர்டரில் கொடுத்த தொலைபேசி எண்ணைத் தொடர்பில் வைத்திருங்கள்.

உங்கள் ஆர்டரில் ஏதேனும் தவறு இருந்தால்

  • பொருள் சேதமடைந்து வந்தாலோ, தவறான பொருள் வந்தாலோ, அல்லது வந்தே சேராவிட்டாலோ, அதை மாற்றித் தருகிறோம் அல்லது முழுப் பணத்தையும் திரும்பத் தருகிறோம். இது திரும்ப அனுப்புதல் அல்ல — சொன்னபடி ஆர்டர் வந்து சேராதபோது உங்களுக்கு நாங்கள் தர வேண்டிய கடமை. இது துணைப் பொருட்களுக்கு எப்படியோ, பார்மாக்களுக்கும் அப்படியே பொருந்தும். முழு விவரங்கள் எங்கள் பணத் திரும்பப்பெறல் & திரும்ப அனுப்பும் கொள்கைப் பக்கத்தில் உள்ளன.
  • support@fashiondot.in என்ற முகவரியில் எங்களைத் தொடர்புகொள்ளுங்கள், அல்லது காலை 9.30 முதல் மாலை 6.30 வரை +91 84486 38639 என்ற எண்ணை அழைக்கவும்.

உள்ளடக்கச் சட்டப்பூர்வத்தன்மை

  • எங்கள் பார்மாக்களைத் தவறாகப் பயன்படுத்துவதோ அனுமதியின்றிப் பகிர்வதோ சட்ட விளைவுகளுக்கு உட்படும்.

இது குறித்து ஏதேனும் கேள்வியா? அழைக்கவும் +91 84486 38639 காலை 9.30 முதல் மாலை 6.30 வரை, அல்லது மின்னஞ்சல் orders@fashiondot.in.

Size Hub-ல் குக்கீகள்

We use cookies to keep your basket and your language. Cookies that measure how the shop is used are set only if you say yes. One advertising cookie is set either way - the notice below explains which, and why. குக்கீகளை நாங்கள் எப்படப் பயன்படுத்துகிறோம்